#Breaking:இரண்டு மாத குழந்தையை விற்று சூதாட்டம் – தந்தை கைது

#Breaking: Shocking incident in Trichy ... Two month old baby sold for gambling - Father arrested!

திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது.

திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை சேர்ந்த சந்தன குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அப்துல் சலாமின் மனைவி நிசா,தனது குழந்தையை மீட்டு தரக்கோரி உறையூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில்,காவல்துறையினர் இத்தகைய கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில்,குழந்தையை விலைக்கு வாங்கிய சந்தன குமார்,பல்வேறு கட்டங்களாக,குழந்தையின் தந்தையான சலாமிடம் ரூ.80 ஆயிரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்காரணமாக, காவல்துறையினர் மேலும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.