#IPL2022: டாஸ் வென்ற கொல்கத்தா.. முதலில் பேட்டிங் செய்யவுள்ள ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), கருண் நாயர், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

வெங்கடேஷ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.