#IPL2021: முதல் போட்டியிலே டாஸ் வென்ற டெல்லி.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!

Chennai Super Kings - Delhi Capitals clash in today's match of the IPL series, Delhi won the toss and elected to bat.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி (விக்கெட் கீப்பர் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேபிட்டல்ஸ்:

ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரஹானே, ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரன் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.