நியூஸிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BanIPL!

The hashtag "No IPL" is trending on Twitter as the Indian team lost to New Zealand.

நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் ட்விட்டரில் ஐபிஎல் வேண்டாம் எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் இந்திய அணியை நம்பியிருந்த ரசிகர்கள் சோகமடைந்தனர்.

இந்திய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் துணிச்சலாக ஆடவில்லை என்று தோல்விக்கு பிறகு கேப்டன் விராட்கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது ஐபிஎல்லை பேன் செய்ய வேண்டும் எனும் ஹஸ்டக் ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. #BanIPL எனும் ஹஸ்டாக் தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.