#RCBvKKR: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர்!

Royal Challengers Bangalore will take on Kolkata Knight Riders in the 10th match of the IPL today. Bangalore won the toss and elected to bat.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

பெங்களூர் அணி:

விராட் கோலி (கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் பட்டீதர், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கொல்கத்தா அணி:

நிதீஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.