இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

unknown node

லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

இந்த செய்தியை யோக்ராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுள்ள பதிவில் ” கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை. என்னை மேலும் புத்திசாலியாக மாற்றியதற்கு நன்றி மேக்கப் மேன் (மேக் அப் தாதா) . கமல்ஹாசன் ஜி (லெஜண்ட்) உடன் இந்தியன்2 படத்திற்கு த லயன் ஆஃப் பஞ்சாப் தயாராக உள்ளது” என பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே, ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.