இளம் பெண் பாலியல் புகார்.! 9 மணிநேரம் தீவிர விசாரணை.! போலீஸ் பிடியில் சினிமா தயாரிப்பாளர்.!
பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில் இருப்பவர் விஜய் பாபு. இவர், தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவரின் மீது புகார்கள் எழுத்து கொண்டு வருகிறது.
விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இளம்பெண் பாலியல் புகார் அளித்தார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனால், விஜய் பாபு மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பேஸ்புக் லைவில் கூறியதற்காக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்படது. இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என கொச்சி போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து கொச்சி வந்தார் விஜய் பாபு. அவர் கொச்சி தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனையடுத்து கொச்சி போலீஸார் விஜய்பாபுவிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.