Tag: பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு – உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ-வுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், சோன்பத்ரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம்  குற்றசாட்டை உறுதி செய்த நிலையில், ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்டுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது ராம்துலர் கோண்டின் சட்டசபை உறுப்பினர் பதவி  […]

BJP MLA 3 Min Read
kond

பாலியல் வழக்கு; சிறை தண்டனை குறைப்பு.. சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை – உயர்நீதிமன்றம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைப்பு. குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநலனில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதி ஜெயசந்திரன் வேதனை தெரிவித்தார். இதனிடையே, 2006-ல் 16 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 […]

#Chennai 3 Min Read
Default Image

இளம் பெண் பாலியல் புகார்.! 9 மணிநேரம் தீவிர விசாரணை.! போலீஸ் பிடியில் சினிமா தயாரிப்பாளர்.!

பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில்  இருப்பவர் விஜய் பாபு. இவர், தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவரின் மீது புகார்கள் எழுத்து கொண்டு வருகிறது. விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இளம்பெண் பாலியல் புகார் அளித்தார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது […]

malayalam 3 Min Read
Default Image

#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி […]

cbcid 4 Min Read
Default Image

பலாத்கார புகாரளிக்க சென்று சிறுமியை பலாத்காரம் செய்த காவல் நிலைய அதிகாரி கைது …!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்திருந்ததையடுத்து காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும், அவரை சஸ்பெண்டு செய்ய  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. […]

#Arrest 3 Min Read
Default Image

பாலியல் புகார் விவகாரம் – மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திலிருந்து விஜய் பாபு விலகல்..!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் தெற்கு போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் […]

malayalam 4 Min Read
Default Image