நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தான் தோத்துட்டேன் – நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – பூமி பட இயக்குனர்!

The director of the film Bhoomi has replied that you have conquered the country and the people of the country who have ridiculed the film.

பூமி படத்தை கிண்டலடித்த ரசிகர்களிடம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான்தான் தோத்துட்டேன் என பூமி பட இயக்குனர் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஓடிடியில் வெளியாகிய படம் தான் பூமி. இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி ஏற்கனவே லட்சுமணன் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கதை முழுவதும் விவசாயத்தைப் பற்றிய ஒன்றாக அமைந்து இருந்தாலும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்களை வைத்து உருவாக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்து கிண்டலடிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சுறா, ஆழ்வார், அஞ்சான் ராஜபாட்டை ஆகிய வரிசையில் நான் இதுவரை பார்த்த படங்களில் பூமி மிக மோசமான படம், ஆரம்பம் முதல் கடைசி வரை எதுவுமே இல்லை எனவும் இனி இயக்குனர் லட்சுமணன் உடன் பணிபுரிவதை நிறுத்திக்கொள்ளுங்கள் ஜெயம் ரவி எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு மற்றொரு ரசிகர் இதை பார்த்தால் இயக்குனர் லட்சுமணன் உங்களை ப்ளாக் செய்து விடுவார் என கிண்டல் அடித்து கமென்ட் செய்துள்ள நிலையில் இந்த ரசிகர்களுக்கு பதிலளித்த இயக்குனர் லட்சுமண், சார் இந்த படம் பண்ணனும் நம்ம அடுத்த ஜெனரேஷன் எல்லாரும் நல்லா இருக்கும்னு நினைச்சு தான் உங்களுக்காக தான் இந்த படத்தை உருவாக்கினேன். ரோமியோ ஜூலியட் படத்தில் கமர்ஷியலாக எடுக்க தெரிஞ்ச எனக்கு இந்த படத்தை எடுக்கத் தெரியாதா? அப்போ நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ, நீங்க சூப்பர் ப்ரோ. நீங்க ஜெயிச்சுடீங்க, நான் தோத்துட்டேன் என கமெண்ட் செய்துள்ளார். வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ்களை வைத்து படம் எடுத்து விட்டு ஏன் இந்த பேச்சு பேசுகிறீர்கள் என மீண்டும் லட்சுமணனின் கமெண்டுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.