தளபதிக்கு நெருங்கிய நண்பனாக நடிக்கும் யோகி பாபு..??

Actor Yogi Babu is reportedly playing a close friend of Vijay in thalapathy 65.

நடிகர் யோகி பாபு தளபதி 65 படத்தில் விஜய்க்கு நெருங்கிய நண்பராக நடித்து வருவதாக தகவல்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காமெடி நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.அதனை தொடர்ந்து ” தளபதி பெரிய லெவல் படம் ஆகும். படத்துல நாணும் இருக்கேன். பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் சொல்லுவாங்க. அது அவங்கலெ அறிக்கை விடுவாங்க” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  தற்போது தளபதி 65 படத்தில் நடிகர் யோகி பாபு விஜய்க்கு நெருக்கிய நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.