தளபதி விஜய்யுடன் இணையும் யோகி பாபு..?

It has been reported that Yogi Babu has joined as a comedian in actor Vijay's 65th film.

நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் .

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டது. அதிலும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.