காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeYashoda [Image Source: Twitter }
இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.
இதையும் படியுங்களேன்-அம்சமான அழகு அப்படியே தெரியுது..டைட்டான உடையில் கிக்கான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!
unknown nodeYashoda Review [Image Source: Twitter }
ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானால் எந்த அளவிற்கு கொண்டாட்டமாக இருக்கோமோ அதே அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்று கூட கூறலாம். படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeYashoda [Image Source: Twitter }
அதன்படி, படம் வெளியான முதல் நாளில் 6.32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டாப்பில் உள்ள நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்கிறதோ அதே அளவிற்கு இந்த படமும் வசூலை குவித்துள்ளது.இதன் மூலம், சமந்தாவின் மார்க்கெட் எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது.