நடிகர் சூர்யாவின் ஒர்கவுட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்
unknown nodeKanguva [Image source : twitter/ @letscinema]
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்தது. அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் நடிகர் சூர்யாவின் உடலமைப்பில் மற்றம் தெரிந்தது. எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் சூர்யாவா இது..? என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
unknown nodeஅந்த வகையில், இப்பொது ஒரு புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. அதாவது, வேறொன்றும் இல்லை நேற்று ஏன் சூர்யா இவ்வளவு குண்டாக மாறினார் என்று தான். அட ஆமாங்க… அவர் கடமையாக ஒர்கவுட் செய்யும் புகைப்படம் தான் அது. இதோ நீங்களே பாருங்கள்….
unknown nodeSuriya latest click [Image Source: Twitter/AmuthaBharathi]
மேலும், கங்குவா திரைப்படத்தில் சூர்யா ஏற்கனவே பல வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே, அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா இப்படி உடல் எடையை சற்று அதிகரிக்க செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
