இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் “வின்னர்”. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக கிரண் நடித்திருப்பார். வடிவேலு, ரியாஸ் கான், எம். என்.ராஜம், நிரோஷா ராதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
unknown nodeபடத்தை மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
unknown nodeபடத்தில் வடிவேலு செய்த காமெடி காட்சிகள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த ஒரு காமெடிகளாக தான் இருக்கிறது. படத்தின் பாதி வெற்றிக்கு அவரும் காரணம் என்றே கூறலாம். படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வருமா என்கிற அளவிற்கு இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
unknown nodeஇந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் பிரசாந்திடம் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா..? என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கும் அதற்கு பதில் அளித்த அவர் ” கண்டிப்பாக வின்னர் படத்தின் இரண்டாவது பாகம் வரும். அது முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர்.