இனி முதல் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பவித்ரா லெக்ஷ்மி கலந்து கொள்ள மாட்டாரா.?அவரே கூறிய பதில்.!

Pavithra Lakshmi, who has been unable to attend the Cook With comali show for the past two weeks, has said she will attend next week.

கடந்த இரு வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத பவித்ரா லெக்ஷ்மி அடுத்த வாரம் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது கோமாளிகள் மற்றும் குக்குகள் செய்யும் லூட்டிகள் தான்.

அதில் போட்டியாளராக இருந்து வருபவர் பவித்ரா லெக்ஷ்மி.இவர் கடந்த வாரம் குக் வித் கோமாளியில் பங்கு கொள்ளவில்லை.அதே போன்று இந்த வார எபிசோடிலும் பவித்ரா லெக்ஷ்மி கலந்து கொள்ளவில்லை என்பது புரோமோ வீடியோவின் மூலம் தெரிகிறது.எனவே ரசிகர்கள் பலர் பவித்ரா லெக்ஷ்மியிடம் இனி குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி கேட்டதாக தெரிகிறது.அதற்கு பதிலளிக்கு வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ,ஒரு சில தனிப்பட்ட காரணங்களாலும் , பிரச்சினைகளாலும் கடந்த இரு வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இயலவில்லை.கண்டிப்பாக அடுத்த வாரம் குக் வித் கோமாளியில் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.மேலும் தன் மீது அளவில்லா அன்பு மற்றும் ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node