பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எவிக்ட் ஆவது இவரா .?

Sanam is said tothe person who got the least number of votes among Ari, Shivani, Anita, Ajith, Ramya, Nisha and Sanam in this week nomination

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள 7 பேரில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக சனம் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

நேற்று வரை குறைவான வாக்குகளை ஷிவானி பெற்றிருந்தார் .அதற்கு அடுத்த நிலையில் ஆஜீத் மற்றும் நிஷா ஆகியோர் இருந்தனர் .இந்த நிலையில் நேற்றுடன் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்ற நபராக சனம் உள்ளார் என்று கூறப்படுகிறது.எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் சனமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் இந்த வாரம் தனியாக பல டாஸ்குகளை செய்ததும் , வரிசைப்படுத்துதலுக்கான டாஸ்க்கில் கூட இரண்டாவது இடத்தை பிடிவாதமாக தக்க வைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது .மேலும் சனம் சில இடங்களில் தேவையில்லாமல் சண்டை போடுவதால் பார்வையாளர்கள் எரிச்சலாகி வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு எடுத்தார்களோ என்று தெரியவில்லை.நிகழ்ச்சியை பார்த்தால் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது தெரிய வரும்.