பில்லா படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த யார் தெரியுமா..?

Actress Isha Koppikar will be playing the role of Nayantara for the first time in Billa.

பில்லா படத்தில் முதன் முதலாக நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை இஷா கோபிகர் தான் நடிக்கவிருந்தாராம்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இன்று தமிழகத்தில் மீண்டும் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, நமிதா என பல நடிகைகள் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகை நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகையை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், முதன் முதலாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை இஷா கோபிகர் தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் கால்சீட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.