அனல் பறக்கும் மாநாடு டீசர் அப்டேட்... ஹிந்தி , தெலுங்கு வெளியீடுவது யார் யார் தெரியுமா..?

Anurag Kashyap will release the Hindi teaser of the conference film tomorrow at 2.34 pm, the film's producer Suresh Kamatchi said on his Twitter page.

மாநாடு படத்தின் ஹிந்தி டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் லுக் , செக்கன்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி சிம்புவின் பிறந்தநாளான நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து படத்தின் ஹிந்தி டீசரை பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் வெளியீடுவார் என்றும். தெலுங்கில் பிரித்விராஜ் சுகுமாரன் வெளியீடுவார் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node