தல 61 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வெளியான புதிய அப்டேட்!

It has been reported that actor Ajith is going to act in his 61st film for the third time under the direction of director H. Vinod.

மூன்றாவது முறையாக நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து வரும் நிலையில், தற்போது கடைசி கட்ட படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. படத்தின் பெயர் வலிமை என்று கூறப்பட்டதை தவிர்த்து வேறு எந்த அப்டேட்டும் இந்த படம் குறித்து வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்திற்கு பின்பு அவரது 61 வது படத்தை யார் இயக்குவார் என தற்போது அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

இந்த 61 வது படம் சுதா கொங்கரா அவர்களால் இயக்கப்பட உள்ளதாக அண்மையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையில்லை எனவும், நடிகர் அஜீத் மீண்டும் இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கத்தில் 3வது முறையாக படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அனைவருக்குமே தெரியும். தற்பொழுதும் வலிமை திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அடுத்த படமும் வினோத் இயக்கத்தில் உருவாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.