ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

Actor Sivakarthikeyan is said to be the first Jay to play the role of Raja in Rani.

ராஜா ராணி படத்தில் முதன் முதலாக ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காதல் கதையா மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதன் முதலாக நடிகர் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது,

அதாவது இந்த ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம் பின்னர் நடிகர் ஜெய் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது என்று கூறப்படுகிறது.