கும்கி 2 வின் கதாநாயகன் யார் தெரியுமா ?

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது ‘கும்கி’ படம் மக்களிடம்

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது ‘கும்கி’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு திரைக்கதை ஒரு பலம் என்றால், இசை இன்னொரு பலமாக இருந்தது.

unknown node

இந்த நிலையில், தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்குவதில் முனைப்பாகயிருக்கிறார் பிரபுசாலமன். அந்தப் படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்த ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகளான ஷிவானி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் பெரும்பாலும் புதுமுகங்கள்தான் என்று மறைமுகமாகக் கூறிவந்த இயக்குநர் பிரபு சாலமன், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னாவை ஒப்பந்தம் செய்தார். கும்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரையே இந்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராக இயக்குநர் முடிவு செய்துள்ளார்.

unknown node

ஹீரோவின் சிறுவயது காட்சிகள் சிலவற்றை தாய்லாந்தில் கடந்த 2017ம் ஆண்டிலேயே ஷூட் செய்யப்பட்டது.

unknown node

பிளாஷ்பேக் காட்சிகளாக அமைய உள்ள அவற்றை குழந்தை நட்சத்திரத்தை வைத்து ஷூட் செய்தனர். ஹீரோ முடிவாவதில், இழுபறி நீடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது கும்கி-2வில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

கேரளாவில் நடந்துவரும் படப்பிடிப்பில்விஷ்ணு விஷால்ஏற்கனெவே கலந்துகொண்டு தனது காட்சிகளில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, மலைப்பகுதி ஒன்றில் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை விஷ்ணு, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

unknown node