சமீரா ரெட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், உள்ளிட்ட சில தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகரின் மனதில் இடம் பெற்றார். அதனையடுத்து அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும்,குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கணவருடன் இணைந்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேள்விகள் கேட்கப்படும் யார் முதலில் முத்தமிட்டவர் என்று கேள்விகள் கேட்க அதற்கு பதில்களை மாத்தி மாத்தி பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பதிலளிக்கிறார்கள்.மேலும் இதை எனது கூச்ச சுபாவமுள்ள கணவரை வைத்து செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeயார் முதலில் முத்தமிட்டார்கள்? நடிகை சமீரா அளித்த பதில்!
Who kissed who first????Inspired by @jlo & @tahirakashyap ????took a lot to convince my shy boy to do this???? mr. and mrs. @vardenchi ❤️#husbandandwife