கர்ணனுடன் மோதும் டாக்டர்... வெற்றி பெறப்போவது எந்த படம்..?

It has been reported that the Karnan movie starring Dhanush and the Doctor starring Sivakarthikeyan will be released on April 9.

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று டீசரை வெளியிட்டு படக்குழு அறிவித்தனர். அனால் படத்திற்கான ரிலீஸ் தேதியை கூறவில்லை இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதைபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், படத்திற்கான மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படமும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரேநாளில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும் ரிலீஸாவதால் எந்த திரைப்படம் அதிக வசூல் சாதனை செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.