பா.ரஞ்சித் சொல்வது உண்மைதான்.! தமிழ்நாட்டில் சாதி கொடுமை இருக்கு.! – ஆர்.ஜே.பாலாஜி காட்டம்.!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில்

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்.

unknown node

இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான  டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது .

unknown node

அதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், அருண் ராஜா காமராஜ், போனிகபூர், தன்யா ரவி சந்திரன்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

unknown node

அப்போது  விழாவில் ஆர்.ஜே.பாலாஜி  பேசியது ” தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 445 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜாதி கொடுமைகளுக்கு எதிராக படம் வரவேண்டும்.

unknown node

பரியேறும் பெருமாள் ஜெய்பீம், மற்றும் பா.ரஞ்சித் படங்கள் வரும் போது இல்லாத சாதியை பற்றி திரும்ப பேசுகிறார்கள் என கல்லூரி மாணவர்கள் சிலர் சொன்னார்கள். அந்த அளவுக்கு கல்லூரி மாணவர்கள் மனதில் ஜாதி எண்ணம் புரையோடி உள்ளது” என்று கூறியுள்ளார். இவர் பேசியது தற்போது பேசும்பொருளாகியுள்ளது.