"என்னங்க சார் உங்க சட்டம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடபட்டுள்ளது.

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடபட்டுள்ளது.

இயக்குனர் பிரபுஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. ஆர்.எஸ் கார்த்தி கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான பீச்சாங்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் என்பவர் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரிக்கின்றார்கள். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது டைட்டிலுடன் வெளியீடபட்டுள்ளது. போஸ்டரில் பல கருவிகளுடன் கலப்பின உடையணிந்த இசைக்கலைஞர் வேடத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி  இருக்கிறார். இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த போஸ்ட்ரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node