ஹிரித்திக் தந்தைக்கு என்ன நோய் தெரியுமா !!!
1980 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியதற்குப்பிறகு, கஹோ நா… பியார் ஹே (2000) என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக ஆண் நடிகர் ஆகிய ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
அவரது தந்தை ராகேஷ் ரோஷன் இவர் பிரபல இயக்குனர் ஆவார்.இவருக்கு தற்போது புற்று நோய் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது அறுவை சிகிசைக்கு செல்லும் முன்னர் கூட தனது மகனான ஹிரித்திக் ரோஷனுடன் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்துள்ளார் தற்போது இந்த படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.