நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது எங்களது முதல் பணி என விஷால் பேட்டி.
சென்னையில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் 66 வது பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பால்கே விருது பெற்ற ரஜினி, பத்மஸ்ரீ விருது பெற்ற சௌவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும், நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின் பொதுச்செயலாளர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது எங்களது முதல் பணி. கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி தேவை. கட்டிடப் பணிகளை விரைவாக முடிக்க உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.