எங்களுக்கு பணத்துக்கு வழி இல்லையா.? யாரு சொன்னது.? கொந்தளித்த பாரதிராஜா மகன் மனோஜ்.!

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார்.

unknown node

இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா பேசியது ” எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை இப்போது நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவிற்கு கலகலப்பாக இருக்கிறார்.

unknown node

அவருடைய சிகிச்சைக்கு பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அதுபோன்ற தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம், என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

இதையும் படியுங்களேன்-களமிறங்குவதற்கு முன்பே கவனம் ஈர்த்த அறிமுகங்கள்… பருத்திவீரன் முதல்… நம்ம லெஜண்ட் அண்ணாச்சி வரையில்….

unknown node

அப்பா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார், எல்லாமே அவருக்கு சினிமா தான், சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம், மீண்டும் திருச்சிற்றம்பலம் படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார், விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்கவுள்ளார் என்று கூறியுள்ளார் மனோஜ் பாரதிராஜா.