NationalCinemaDay: பிரம்மாண்ட திரையில் படம் பார்க்க வெறும் ரூ.99தான்…ஆனால் ஒரு கண்டிஷன்..!

National Cinema Day 2023

இந்தியா முழுவதும் இன்று தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பிவிஆர் சினிமாஸ், சினிபோலிஸ், மிராஜ் சினிமாஸ்,டெலிட் சினிமா உட்பட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளது.

இந்நிலையில், தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, பிரம்மாண்ட திரையில் படம் பார்க்க, அதன் டிக்கெட்டின் விலை வெறும் ரூ.99க்கு விற்பனை செய்யப்படும் என்று Multiplex Association of India அறிவித்துள்ளது. இந்த அறிய வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் ரசிகர்களே இன்றைய நாளை தவிர, மற்ற நாட்களில் அதிக ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) இந்த ஆண்டின் தேசிய சினிமா தினம் இன்று (அக்டோபர் 13 ஆம் தேதி) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது என முன்பே அறிவித்தது. இந்நிலையில், சினிமா பிரியர்கள் குறைந்த விலையில் திரைப்படங்களைப் பார்க்க முடியும் என்றும், அதன் டிக்கெட்டுகளின் வெறும் ரூ.99 தான் என்றும் அறிவித்திருந்தது.

இதில் கண்டிஷன் என்னவென்றால், சாதாரண 2டி, 3டி திரையரங்குகள் தவிர்த்தும், ரிக்லைனர் மற்றும் பிரீமியம் ஷோக்களை தவிர்த்து, சினிமா ஆர்வலர்கள் அக்டோபர் 13ஆம் தேதி, ரூ.99 கொடுத்து எந்தப் படத்தினாலும், எந்தக் காட்சியையும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

முதல் முறையாக தேசிய சினிமா தினம் 2022-ல் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு, 6.5 மில்லியனுக்கும் அதிகமான சினிமா பிரியர்கள் தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களை கண்டு மகிழ்ந்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்