சக்கரகட்டி திரைப்படத்தை இயக்கியது இந்த தயாரிப்பாளரின் மகனா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

சாந்தனு வேதிகா, இஷிதா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சக்கரக்கட்டி”. இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் மகனான கலாபிரபு தாணு தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த சமயம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் எதோ ஒரு இயக்குனர் என்று தான் பலரும் நினைத்து கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால், இந்த படத்தை இயக்கிய கலாபிரபு தாணு பல ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் மகன் தான்.
அந்த சமயம் கலாபிரபு தாணு இயக்கம் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் “சக்கரக்கட்டி” இயக்கினாராம். இந்த படத்தை அவருடைய தந்தையே தயாரித்தும் இருந்தார். ஆனால், படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றே சொல்லலாம். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பெரிய அளவில் ஹிட் ஆனது.
இந்த நிலையில், “சக்கரக்கட்டி” திரைப்படம் பற்றியும் தன்னுடைய மகன் கலாபிரபு தாணு இயக்கம் மீது கொண்டுள்ள ஆர்வத்தை பற்றியும் கலைப்புலி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய மகனுக்கு சிறிய வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். அவன் சிறிய வயதில் இருக்கும் போது என்னை பார்க்க வரும் பலரும் அவனிடம் பேசுவார்கள்.
அவனிடம் பேசிவிட்டு என்னிடம் வந்து உன்னுடைய மகன் பெரிய ஆளாக வருவான் அவனுக்குள் நிறைய திறமை இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், சினிமாவை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதால் நம்மளுடைய பையன் இங்கு சிக்கவேண்டாம் என்று நினைத்தேன். எனவே அவர் சினிமாவுக்கு வரக்கூடாது என்று தான் நினைத்தேன்.
ஆனால், காலம் செய்த கோலம் தான் அவனை சினிமாவிற்குள் கொண்டு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். “சக்கரக்கட்டி” படம் எல்லாம் முடிந்து ரஹ்மானிடம் செல்கிறது. ரீ ரெக்கார்டிங்காக என்னை அழைத்தார். பிறகு என்னிடம் உங்களுடைய மகனை நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன் ஆனால், திறமையான ஆளு தான் என்று ரஹ்மான் பாராட்டினார் ‘எனவும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025