தல அஜித் நடித்த’ விஸ்வாசம் ‘ இன்று மிக பிரம்மாண்டமாய் திரைக்கு வந்துள்ளது. எனவே ரசிகர்கள் தல அஜித்தை காண ஆவலுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார்.
மேலும் இன்று’ பேட்ட ‘ படமும் திரைக்கு வருவதால் இந்த இரண்டு படங்களுக்கு இடையில் மாபெரும் போட்டி நிலவுகிறது. ரசிகர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மதுரையில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளதால் அந்த பகுதி ரோடே ப்ளாக் ஆகியுள்ளது. மேலும் அந்த பகுதியில் ரசிகர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் கூடியதால் மதுரை ரோடு ப்ளாக் ஆகியுள்ளது. மேலும் இந்த காரணத்தினால் போக்குவரத்துகள் சில நிமிடங்கள் பாதித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.