விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் இரண்டு லுக் போஸ்ட்டார்கள் வெளியிடப்பட்டு படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஇந்நிலையில், விறு விறுவென முழுவீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் யோகி பாபுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது என தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Final Schedule of #VVS & #Saamanyudu Starts Today !!!#VVSFromDecember#VeerameVaagaiSoodum#SaamanyuduFromDecember pic.twitter.com/7Yrhds76De
— Vishal (@VishalKOfficial) September 14, 2021