ஓடிடியில் வெளியாகும் விஷால் திரைப்படம்..??

It has been reported that the Madhakajaraja film starring Vishal, which has been in production for the last few years, will be released on ODD

விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருந்த திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டி இசையமைத்துள்ளார். 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஷால் சக்ரா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 31 வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.