சக்ராவை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் & யுவன் கூட்டணி..!

that actor Vishal will next be seen in a film directed by a debutant director and composer Yuvan Shankar Raja will compose the music for the film.

நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து புதிய அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.