கையில் லத்தியுடன் கம்பீரமாக நிற்கும் விஷால்.! வெளியானது புதிய போஸ்டர்.!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா

அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு, இரும்புதிரை, அவன் இவன், தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது லத்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஷால் கையில் லத்தி மற்றும் ரத்த கரைகளுடன் கம்பீரமாக நிற்கிறார். இந்த போஸ்டரை நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.