விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியினர் தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . சமீபத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலி மற்றும் தனது குழந்தையுடனான புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து தனது மகளுக்கு ‘வாமிகா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
unknown node