இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா..??

It has been reported that the 2011 Vikram Veda movie will be a remake in Hindi

2011 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். மேலும்  ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. முன்பே இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இது உறுதியாகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.