ஓடிடி தளத்தில் வெளியானது "விக்ரம்".! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியானால் மிகப்பெரிய ஹிட் அடித்துவிடும் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி தான் விக்ரம் படமும், கடந்த ஜூன்

தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியானால் மிகப்பெரிய ஹிட் அடித்துவிடும் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி தான் விக்ரம் படமும், கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த படம் வெளியாகி 6 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. திரையரங்கில், பார்க்காத ரசிகர்கள் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள்.

unknown node

அவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் விதமாக இன்று விக்ரம் திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்துடன் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.