விக்ரம் மாபெரும் வெற்றி.! லோகேஷுக்கு சொகுசு காரை பரிசளித்த ஆண்டவர்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

unknown node

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து பார்த்தால் கண்டிப்பாக 500 கோடி வசூலை கடந்து விடும் என தெரிகிறது.

unknown node

ஏனென்றால், படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி கொண்டேதான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 170 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவே கமல்ஹாசனுக்கு அதிகம் வசூல் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

unknown node

இந்த நிலையில், “விக்ரம்” படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.