இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்துள்ளார்.
unknown nodeராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றே கூறலாம்.
unknown nodeதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதைபோலவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
unknown nodeநேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 34 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து, விக்ரம் படம் தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் நாளில் 24கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் முதல் நாளில் அதிகம் வசூல் கொடுத்த படம் இது தான் என்ற சாதனையும் படைத்துள்ளது.