கமலுக்கு விக்ரம் என்றால் விக்ரமுக்கு கோப்ரா.! பிளாக் பஸ்டர் உறுதி... உதயநிதி நம்பிக்கை...!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

unknown node

கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றே போனது. அதன்பிறகு ஒருவழியாக வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

unknown node

இதனைமுன்னிட்டு, நேற்று கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பீனிக்ஸ் மாலில் இரவு 7 மணிக்கு நடைபெற்றது. அதில் விக்ரம், துருவ் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் என பலர் கலந்து கொண்டார்கள்.

unknown node

விக்ரம் சார் இந்த திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்களில் நடித்துள்ளார். படத்திலிருந்து சில நிமிட காட்சிகளை பார்த்தேன். படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. கமல் சாருக்கு விக்ரம் என்றால், விக்ரம் சாருக்கு கோப்ரா. விக்ரம் படத்தில் கமல் என்ன செய்தாரோ அதை தான் கோப்ராவில் விக்ரம் செய்திருக்கிறார். படம் கண்டிப்பாக வெற்றிபெறும்” என தெரிவித்துள்ளார்.