அண்ணாத்த வசூலை முறியடித்த விக்ரம்.! ஆண்டவரின் ஆட்டம் வெறித்தனம்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் சூர்யா கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் தாறுமாறாக இருப்பதாகவும், ஆண்டவர் படம் 4 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கையில், முதல் நாளில் மட்டும் பெரிய வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, வெளியான முதல் நாளில் மட்டும் 34 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை விக்ரம் திரைப்படம்  முறியடித்துள்ளது. கமலின் சினிமா கெரியரில் முதல் நாளில் அதிக வசூலை  கொடுத்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

அண்ணாத்த வசூலை முறியடித்த விக்ரம்.! ஆண்டவரின் ஆட்டம் வெறித்தனம்.!