விஜயின் கடைசி பட அறிவிப்பு! தளபதி 69 அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

விஜய் நடிக்கவுள்ள அவருடைய 69-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thalapathy 69 Update

சென்னை :GOAT படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட, இயக்குநர் வினோத் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில் கலந்துகொண்டபோது, விஜயின் 69-வது படத்தை தான் இயக்குவதை உறுதிப்படுத்திவிட்டார்.

இருந்தாலும், தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என தான் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய, காத்திருப்புக்கு விருந்து வைக்கும் வகையில், தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், அந்த நிறுவனமே இன்று மாலை 5 மணிக்கு பட அறிவிப்பு வெளியாகும் என்பதை சூசகமாக விஜய் பட வீடியோக்களை வெளியீட்டு அறிவித்துள்ளது.

unknown node

இன்று வெளியாகவுள்ள, அறிவிப்பில் தளபதி 69 படத்திற்கு இசையமைப்பாளர் யார்? என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் மூலம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளது.

அதைப்போல, இந்த படம் தான் விஜய்க்கு கடைசி திரைப்படமும் கூட, ஏனென்றால் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார்.எனவே , விஜய்க்கு இது தான் கடைசி படம் என்பதால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.