மகன் சண்முகபாண்டியனின் 'படை தலைவன்' வீடியோவை வெளியிட்ட விஜயகாந்த்!

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு 'படை தலைவன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று தனது பிறந்தநாளை

PadaiThalaivan

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படை தலைவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், விஜயகாந்த் தொண்டர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். கடைசியாக, மதுர வீரன் படத்தில் நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மீண்டும் ஒரு அதிரடி திரைப்படத்தின் மூலம் வியக்கவைத்துள்ளார்.

இயக்குனர் அன்பு இப்படத்தை இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இந்த வீடியோவை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடிவில் சண்முக பாண்டியன் கரடுமுரடான தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.

unknown node

நட்பே துணை புகழ் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.

மகன் சண்முகபாண்டியனின் 'படை தலைவன்' வீடியோவை வெளியிட்ட விஜயகாந்த்!