ஹீரோவாகும் 'விஜய் டிவி' பப்பு .!

Vj Pappu, who has been the presenter, is currently set to play the hero in the new film.

தொகுப்பாளராக இருந்து வரும் விஜே பப்பு தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

விஜய் டிவியில் கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே பப்பு . தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் விஜே பப்புவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது .

ஆம் வணக்கம் தமிழா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜே பப்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.பாபு தமிழ் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.பேண்டஸி படமாக உருவாகும் இந்த படத்தில் பப்புவுடன் அஜய் வாண்டையாரும் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பப்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node