டிரெண்டாகும் #ShameOnVijaySethupathi.."800″ படத்திற்கு கடும் எதிர்ப்பு.!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளத்து.

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து, அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்ததை அடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது.

மேலும், இனி எவ்வளவு அட்டகாசமான நடிப்பையும் படத்தையும் நீங்கள் கொடுத்தாலும் சரி. இனி உங்கள் படம் பார்க்க திரையரங்கம் செல்ல மாட்டோம் என இன்று டுவிட்டரில்#ShameOnVijaySethupathiஎன்ற ஹேஸ்டாக் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில்#ShameOnVijaySethupathiஎன்ற ஹேஸ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.