திருந்தவே மாட்டீங்களாடா? அந்தப் பிரச்சினையே முடிஞ்சு போச்சு – விஜய் சேதுபதி காட்டம்!

Vijay Sethupathi has asked Vijay Sethupathi not to change his mind when asked about the 800 film, harsh answer

விஜய் சேதுபதியிடம் 800 படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு திருந்தவே மாட்டீர்களா, அது முடிந்த கதை மீண்டும் கிளப்பாதீர்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக சென்னை கார்சே சர்வீஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர், நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்பொழுது 800 படம் குறித்த கேள்வியை அவரிடம் எழுப்பியதற்கு உடனடியாக திருந்தவே மாட்டீங்களாடா? அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு, மீண்டும் கிளப்பாதீர்கள் என பதிலளித்துள்ளார். மேலும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு விஜய்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.