பிறந்தநாளுக்காக பட்டாக்கத்தியால் கேக் வெட்டி விட்டு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

Vijay Sethupathi is currently apologizing for cutting the birthday cake with the band knife in the office along with the crew.

தனது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் இணைந்து அலுவலகத்தில் பட்டா கத்தி வைத்து பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக தற்பொழுது விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல அவர்களை போலீசாரும் துரத்திப் பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தான் தற்போது வழக்கமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் போலீசார் அடிக்கடி அறிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அலுவலகத்தில் பட்டா கத்தி வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

unknown node

இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியதை தொடர்ந்து பலரும் நீங்களே தவறான முன்னுதாரணமாக இருந்தால் எப்படி என கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில், இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும், பிறந்த நாளுக்காக கடந்த 3 நாட்களுக்கும் முன்பதாக எனது அலுவலகத்தில் வைத்து பிறந்த நாள் கொண்டாடிய போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பட்டாக்கத்தியால் அந்த பிறந்தநாள் கேக் வெட்டி இருப்பேன். பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன், அந்த படத்தின் கதைப்படி படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். எனவேதான் அந்த பட குழுவினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் பொழுது அதை பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன். இது தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதம் ஆகியுள்ள நிலையில், இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node