மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக்கு விஜய் சார் மட்டும் தான் காரணம் – விஜய் சேதுபதி பேட்டி!

Actor Vijay Sethupathi, who played the villain in the film, has said that Vijay is the reason why the master movie is so good.

மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு காரணம் விஜய் தான் என அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை கார்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு சென்று விஜய் சேதுபதி ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி அந்நிறுவனத்தை திறந்து வைத்தார். விஜய் சேதுபதியின் வருகையை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டம் கூடவே, சற்று நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அப்பொழுது பேசிய அவரிடம் விஜய் மாஸ்டர் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. மீண்டும் மக்கள் திரையரங்குக்கு வந்து இருக்கிறார்கள். இது பலருக்கு வாழ்க்கையும் நம்பிக்கையும் தொடங்கி வைத்து இருக்கிறது எனவும், படம் முழுக்க முழுக்க சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் விஜய் சார் தான் எனவும் கூறியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக்கு விஜய் சார் மட்டும் தான் காரணம் – விஜய் சேதுபதி பேட்டி!