விஸ்வாசம் படத்திலும் விஜய் பற்றியா பேசி இருக்கிறார்கள் !!!
அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம் ‘ நேற்று படம் மிக பிரம்மாண்டமாய் திரைக்கு வந்தது. இதனை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தை பார்த்து விட்டு நல்ல கருத்துக்களை ரசிகர்களும், பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘ விஸ்வாசம் ‘ படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் தல அஜித் தனது மகளிடம் இதுவரை எத்தனை போட்டிலமா ஜெயிச்சுருக்க?’ என்று கேட்டிருப்பார். அதற்கு அவருடைய மகள் 62 என்று பதில் அளித்திருப்பார்.
அதற்கு அஜித் ‘அடங்கேப்பா’ என்று கூறியிருப்பார். மேலும் விஜய் 62 படங்களை நடித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவே இந்த காட்சியை விஜய்யுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கூறி இருக்கின்றனர்.